என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நீங்கள் தேடியது "விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை"
அம்பையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் மருதுபாண்டி(வயது 33). கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து மருதுபாண்டி உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் உடலை பெற்று அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அம்பை போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் மேலண்ட வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 51). சுமை தூக்கும் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், சமீப காலமாக சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவரது மனைவி ஜெயசித்ரா தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ராமலிங்கம் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு ஜெயசித்ரா வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது அங்கு கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கணவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்ததும் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X